பெண்கள் இனி பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது: அதிர்ச்சி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு எதிரான பல அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெண்கள் பல்கலைக்கழகம் சென்று படிக்க கூடாது என தாலிபான்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண் கல்வி மற்றும் பெண் சுதந்திரத்தை கடுமையாக நசுக்கும் தாலிபான்கள் பல்கலைக்கழக கல்வியை நாடு முழுவதும் பெண்களுக்கு தடை விதித்திருப்பது தடை விதிப்பதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில் பெண்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும் தாலிபான்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர் என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் உயர் கல்வித் துறை அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மறு அறிவிப்பு வரும் வரை பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இதனால் பல ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தாலிபான்களால் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேல் படிக்க முடியாது என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.