ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் தக்காளி சண்டைக்கு 130 டன் தக்காளி சேம்மிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெலன்ஸியா மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை அன்று தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி சண்டைப்போடும் திருவிழா கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவை நடத்த அரசு தடை விதித்திருந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் தக்காளி சண்டை திருவிழா நடைப்பெற இருப்பதால் ஸ்பெயின் நாடு முழுவதும் தக்காளி சேகரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக சுமார் 130 டன் தக்காளி சேகரிக்கப்பட்டு வெலன்ஸியா மாகாணத்திற்கு அனுப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.