இரண்டாவது தடுப்பூசி போட போறீங்களா? உங்களுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு! அசத்திய குஜராத்;

கொரோனா நோயை தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி தான் என்று இந்தியாவில் வாசகங்கள் அதிகமாக காணப்படுகிறது. வாசகங்கள் மட்டுமின்றி இந்தியாவில் அதிக அளவு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.

 

தடுப்பூசி

தற்போது வரை 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு மாநில அரசும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களுக்கு புதுப்புது விதங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் இரண்டாம் தவணை தடுப்பூசி  செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.எனவே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் விரைந்து சென்று தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment