Connect with us

பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக!! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

ஸ்டாலின் கடிதம்

Tamil Nadu

பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக!! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக!! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் CUET கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் உயர் கல்வி சேர்க்கையிலும் நுழைவுத்தேர்வை கொண்டுவரும் ஒன்றிய அரசின் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.  மாணவர்கள் தங்களின் நுழைவு தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் ஒரு சூழல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை என கூறியுள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட எந்த ஒரு நுழைவு தேர்வும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களை படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மாநிலங்களில் 80% விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களை பயின்று வருபவர்கள் என்பதை முதல்வர் சுட்டிக்காட்டினார். NCERT பாடத் திட்டத்தின் நுழைவுத் தேர்வு ஒன்றிய பல்கலைகழகங்களில் சேருவதற்கான தகுதியான பெரும்பான்மையான மாணவர்களுக்கு பாதகமான நிலையினை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலை நம்நாட்டில் உள்ள பல்வேறு ஒன்றிய கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கைகளை வெகுவாக குறைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். CUET பொது நுழைவுத் தேர்வு நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top