21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! இந்தியா-இலங்கை இடையே உள்ள பிரச்சனையை முடிவு கட்டுங்கள்!: ஸ்டாலின்

இந்தியாவிலேயே மிகவும் கடினமான தொழில் என்றால் அதனை மீன்பிடி தொழில் என்றும் சொல்லலாம். கடலுக்கு ஆழம் தெரியாதை விட நீளம் தெரியாது என்றுதான் கூறமுடியும். இவ்வாறுள்ள கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்.

ஒரு சில நேரங்களில் மீனவர்களை சிறைபிடித்து செல்கிறார்கள். சில சமயங்களில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றால் திரும்பி வருவது அபூர்வமாகவே காணப்படுகிறது .

கடலுக்கு சென்றால் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். அந்த வரிசையில் புதிதாக 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 21 மீனவர்களை உடனே விடுவிக்க என்று கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

21 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளை உடனே விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment