Entertainment
பிரபல இசையமைப்பாளர் எழுதிய புத்தகம்- இன்று வெளியீடு
பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படம் இரண்டு பேர்களை அறிமுகப்படுத்தியது .ஒருவர் படத்தின் நடிகரும் திமுக முன்னாள் தலைவர் மறைந்த கலைஞரின் பேரனான அருள்நிதி, மற்றொருவர் இசையமைப்பாளர் தாஜ் நூர். மிகச்சிறப்பான கிராமிய மணத்தை வெளிப்படுத்தக்கூடிய இப்படத்தின் கதைக்களத்தில் புகுந்து விளையாடினார்.

இந்த படத்தில் இசையமைத்ததன் மூலம் தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதுவரை 16 படங்களில் இசையமைத்திருக்கும் தாஜ் நூரின் சொந்த ஊர் சேலம் ஆகும்.
இசையமைப்பதோடு நில்லாமல் கணிணி குறித்த புத்தகமும் விளக்கத்துடன் எழுதியுள்ளார். அவற்றின் வெளியீட்டு விழா இன்று சென்னை புத்தக கண்காட்சியில் நடக்கிறது.
