தமிழரைக் கரம் பிடித்த தைவான் நாட்டுப் பெண்; பட்டுப்புடவையில் தமிழ் முறைப்படி நடந்த திருமணம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த ஆவத்துப்பாடி கிராமத்தை சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் தைவானை சேர்ந்த சியாங் ஷியா ஜங் என்பவருக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் இருவரும் தங்கள் காதலை தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளனர். இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், மணமகளுக்கு தமிழ் கலாச்சாரம் பிடித்திருந்த நிலையில், தமிழ் முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் அமைந்துள்ள கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் மணமக்கள் ராஜேந்திரன்-சியாங் ஷியா ஜங் ஆகியோரின் திருமணம் இரு வீட்டாரின் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் தைவானில் இருந்து மணமகளின் உறவினர்கள், தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை , புடவை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment