தை 1 ஆம் தேதியா? சித்திரை 1 ஆம் தேதியா? எது தமிழ் புத்தாண்டு? குழப்பத்தில் மக்கள்!

நம் தமிழர்கள் அனைவரும் சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருவர். இருப்பினும் ஒரு சில நேரங்களில் தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக அனுசரிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு என்று என்பது தற்போது வரை குழப்பத்தை உண்டாக்கும்.

பரிசு தொகுப்பு

இந்நிலையில் தமிழக அரசும் தை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வண்ணமான பையை வெளியிட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தை 1ம் தேதியான பொங்கல் பண்டிகையின்போது நியாயவிலைக் கடைகளில் ரேஷன் கடை காரர்கள் காண 20 இலவச பொருட்கள் போன்ற துணிப்பை கொடுக்கப்படும்.

இந்த துணிப்பையில் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் அச்சிடப்பட்ட போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.இதனால் தமிழக அரசு 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.

ஆனால் 2022-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களில் சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் புத்தாண்டு குறித்தான குழப்பம் நீடித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment