இன்ஸ்டாகிராம் பிரபலத்தில் இருந்து சின்னத்திரைக்கு புரோமோஷன் ஆகி அங்கிருந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று, தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்திருப்பவர் ஷிவானி நாராயணன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழில் சீரியலான இரட்டை ரோஜா மூலமாக தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி. அக்மார்க் தமிழ்பொண்ணு. சோசியல் மீடியா ஃபேன்ஸ் செல்லமாக ‘4 மணி ஷிவானி’ என அழைக்கும் அளவிற்கு 4 மணி ஆனாலே அதிரிபுதிரி போட்டோஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிவிடுவார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்குப் பிறகு ஃபேன்ஸ் பட்டாளமும் அதிகரித்துவிட்டதால், கொஞ்சம் கவர்ச்சியை இன்னும் கூட்டி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் அழகை வெளிச்சம் போட்டும் காட்டும் உடையுடன், புஷ்பா படத்தில் இடம் பிடித்த ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆடியுள்ள நடனம் வைரலாகி வருகிறது. கறுப்பு, வெள்ளையில் கட்டம் போட்ட சட்டை, லைட் புளூ கலர் ஜீன்ஸ் அணிந்து கொண்டு அநியாயத்திற்கு ஷிவானி ஆடியிருக்கும் கவர்ச்சி ஆட்டம் இன்ஸ்டாவை எகிற வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ லிங்க்.
https://www.instagram.com/reel/CZ_medzg3Gs/?utm_source=ig_web_copy_link