நடிகர் விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடக்கும் இந்த ஷுட்டிங்கில் கடந்த வாரம் முதல் விஜய் பங்கேற்று வருகிறார்.
இதற்காக விஜய், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ செம வைரலானது.இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் முடிந்து, மூன்றாம் கட்ட ஷுட்டிங்கும் நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது. இரவு நேர ஷுட்டிங்காக இது நடத்தப்பட்டு வருகிறது.
புதிய அப்டேட்டாக தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் உள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை இசையமைப்பாளர் தமன் ஏற்கனவே முடித்து விட்டார்
விரைவில் தளபதி 66 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி 66 செட்டில் விஜய் வீடியோ கால் ஒன்றில் பேசி உள்ளார். தளபதி 66 பட லுக்கில் விஜய் பேசிய வீடியோ காலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அந்த போட்டோவை செம வைரலாக்கி வருகிறார்கள், அவரின் தீவிர ரசிகர்கள். இதில் செம ஸ்மார்டாக, இளமையான லுக்கில் விஜய் காணப்படுகிறார்.
நன்றி மறக்காத தனுஷ் !! அவ்வளோ நல்லவரா ??..
10 வருடத்திற்கு முன் விளம்பரங்களில் நடித்த போது விஜய் என்ன லுக்கில் இருந்தாரோ, அதே லுக்கில் தற்போது காணப்படுவதால் ரசிகர்கள் முதல் அனைவரும் விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்டு, கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய்யின் இந்த ஸ்டைலான லுக்கிற்காகவே படம் செம ஹிட் ஆகும் என அவரின் தீவிரமான ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.