டி20 உலகக் கோப்பை 2022: இந்திய அணியின் போட்டிகள் எப்போது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மார்ச் 22 ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா தனது போட்டியை தொடங்குகிறது.

டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16 முதல் தொடங்கும் முதல் சுற்றில் எட்டு அணிகள் மோதும் சூப்பர் 12 கட்டத்திற்கு முன்னேறும். இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

T20 World Cup Trophy

சூப்பர் 12 கட்டத்தில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் 1 இல் இடம்பிடித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ளது.

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் போட்டிகள்

23 அக்டோபர் – பாகிஸ்தான்

27 அக்டோபர் – குரூப் A ரன்னர் அப்

30 அக்டோபர் – தென்னாப்பிரிக்கா,

2 நவம்பர் – பங்களாதேஷ்,

6 நவம்பர் – குழு B வெற்றியாளர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment