டி20 உலகக்கோப்பை 2022 புள்ளிப்பட்டியல் பற்றிய முழுவிபரம்! அரையிறுதியில் யார்?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. இந்த டி20 தொடரின் சூப்பர் 12 லீக் சுற்று போட்டிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

t20

கடைசியாக இந்தியா – ஜிம்பாப்வே மோதிய போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதை தவிர நெதர்லாந்து கொடுத்த ஷாக் காரணமாக அரையிறுதியில் இருந்து வெளியேறியது தென்னாப்பிரிக்க அணி.

குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா,பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

India World cup

அரையிறுதி சுற்றை பொறுத்தவரையில் இந்திய அணி – இங்கிலாந்து அணியையும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் வரும் நவம்பர் 9ம் தேதியன்று மோதவுள்ளது. இதே போல 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து நவம்பர் 10ம் தேதியன்று மோதவுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.