T20 உலகக் கோப்பை 2022 — புள்ளிகள், அட்டவணை குறித்த முழு தகவல்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்கபடவுள்ளது. இந்த T20 உலகக் கோப்பை தொடர் 2020 இல் நடத்தப்பட வேண்டும், ஆனால் கொடிய கோவிட் 19 காரணமாக, ஐசிசி போட்டியை ஒத்திவைத்து 2022 இல் நடத்த முடிவு செய்தது.

புள்ளிகள் அட்டவணை:

சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் களமிறங்கும் என்றும் 2022 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 அணிகளில் 8 அணிகள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிசி வெளிப்படுத்தியுள்ளது.

icc world cub

இறுதி செய்யப்பட்ட எட்டு அணிகள் குரூப் 1 மற்றும் 2ல் இடம் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை குரூப் 1ல் உள்ளன.

இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள் குரூப் 2 இல் உள்ளன. அதே குழுவில் தென்னாப்பிரிக்காவும் இடம் பெற்றுள்ளது.

மீதமுள்ள 4 இடத்திற்கு 8 அணுக்கள் மோதுகின்றன. அதில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

டி 20 உலகக் கோப்பை – ஜஸ்பிரித் பும்ராக்கு பதிலாக களமிறங்கும் மற்றொரு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

ஒரு அணி வெற்றி பெற்றால் 2 புள்ளிகள் கிடைக்கும். ஆட்டம் கைவிடப்பட்டாலோ அல்லது சமநிலையில் இருந்தாலோ அல்லது முடிவு ஏதுமின்றி முடிவடைந்தாலோ, அணிக்கு 1 புள்ளி கிடைக்கும்.

1 மற்றும் 2 போன்ற குழுக்களில் இருந்து, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment