t20 வேர்ல்டு கப்: வெப்சைட் உருவாக்கி சூதாட்டம் செய்த 3 பேர் கைது!

சூதாட்டங்கள்

தற்போது உலக கோப்பைக்கான டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் தற்போது தகுதி பெற்று, பலப்பரிட்சை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் தொடர் தொடங்கினால் இந்தியாவில் பல பகுதிகளில் சூதாட்டங்கள் நிகழும்.சூதாட்டங்கள்

அதனை அவ்வப்போது போலீசார் கண்டறிந்து சூதாட்டத்திலிருந்து ஈடுபட்டவர்களை கைது செய்யும். அதன் தொடர்ச்சியாக தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பெட்டிங் எனப்படும் சூதாட்டம் நடப்பதாக புகார் வந்த நிலையில் புகாரின்பேரில் பெங்களூர் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பிரகாஷ், சப்தல் சிங், கவர்சந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து 3.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்திற்காக இணையதளம் உருவாக்கி அதனை நாடு முழுவதும் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இதனால் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் பலரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print