காமன்வெல்த் விளையாட்டில் டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்!!

இன்றைய தினம் இந்தியாவிற்கே விளையாட்டு தினமாக மாறி உள்ளது. ஏனென்றால் இன்றைய செஸ் ஒலிம்பியார்ட் போட்டி தொடங்குகிறது. மேலும் மேற்கத்திய தீவுகள் அணி இடையேயான முதல் 20 ஓவர் போட்டியும் இன்றைய தினம் தான் தொடங்குகிறது.

இந்த நிலையில் காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியில் இன்று இந்தியா விளையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது.

பர்மிங்காமில் 03:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஹர்மன் பிரித் தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. காமன்வெல்த் விளையாட்டில் முதல் முறையாக கிரிக்கெட் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை ஆறு முப்பது மணிக்கு நடக்கும் மகளிர் ஹாக்கி முதலாவது லீக் போட்டியில் இந்தியா-கானா அணிகள் மோதுகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.