Connect with us

வெளிநாடுகளில் டி20 கிரிக்கெட் தொடர்: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

பிசிசிஐ

விளையாட்டு

வெளிநாடுகளில் டி20 கிரிக்கெட் தொடர்: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் கடந்த 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடரானது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக மற்ற நாடுகளிலும் டி20 தொடர் போட்டிகள் படிப்படியாக நடத்த தொடங்கினர்.

ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இதன் வளர்ச்சியை எட்ட முடியவில்லை. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ், துபாய், தென்னாபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஐபிஎல் டி20 போட்டியினை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஐபிஎல் டி20 போட்டியில் இந்திய வீரர்கள் கலந்துகொள்வார்களா? எதிர்பார்ப்பு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிசிசிஐ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி, வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், தென்னாபிரிக்காவில் நடக்க இருக்கும் டி20 லீக்கில், ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்திருப்பதையடுத்து, இத்தகைய நடவடிக்கை பிசிசிஐ எடுத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top