சிம்பு திருமணம் எப்போது? டி ராஜேந்தர் அறிவிப்பால் பரபரப்பு!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனின் திருமணம் குறித்த தகவலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. அவர் ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா உள்பட ஒரு சில நடிகைகளை காதலித்து அதன்பின் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவுக்கு கடந்த பல ஆண்டுகளாக பெண் பார்த்து வருவதாகவும் ஆனால் அவருக்கேற்ற பெண் சரியாக அமையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த இயக்குனர் டி ராஜேந்தர் தனது மகன் திருமணம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்தார்.

Rajendran 1என் மகனுக்கு நானும் என் மனைவி உஷா ராஜேந்தரும் பெண் பார்ப்பதைவிட இறைவன் தான் பெண் பார்க்க வேண்டும் என்றும் இறைவன் சிம்புவுக்கு சரியான ஒரு மணமகளை தேர்வு செய்த பின்னர் அவரது திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சிம்புவுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பெண் பார்த்தும் அவருக்கு சரியான மணமகள் கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்னை பார்ப்பவர்கள் எல்லாம் சிம்புவுக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். எனவே சரியான மணமகள் கிடைத்தவுடன் இறைவன் அருளால் விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறும் என்றும் டி ராஜேந்தர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தற்போது ’பத்து தல’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews