தமிழில் நான்கே படங்கள்.. டி.ராஜேந்தரின் ஹீரோ ஸ்ரீநாத்..!

தமிழில் நான்கு படங்களும் மலையாளத்தில் சில படங்களும் நடித்த நடிகர் ஸ்ரீநாத் என்பவர் மர்மமான முறையில் படப்பிடிப்பின் போது மரணம் அடைந்தார். அவரது மரணம் கொலை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினாலும் கடைசி வரை அவரது மரணம் மர்மமாகவே இருந்தது.

கேரளாவை சேர்ந்த ஸ்ரீநாத் பள்ளி படிக்கும்போதே நடனம் நாட்டியம் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார். படிப்பை முடித்தவுடன் அவர் சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.

கே.பாலசந்தர் படத்தில் அறிமுகம்.. கமல் ரஜினியுடன் நடிப்பு.. நடிகர் திலீப் திரை பயணம்..!

நடிப்பு பயிற்சி முடிந்தவுடன் அவர் சென்னையின் பல கம்பெனிகளில் ஏறி இறங்கிய நிலையில் அவருக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மோகன் இயக்கத்தில் ஷோபா முக்கிய வேடத்தில் நடித்த ஷாலினி என்ற திரைப்படத்தில் ஸ்ரீநாத் நாயகனாக அறிமுகமானார். ஷாலினி படம் தான் தமிழில் சுஜாதா என ரீமேக் ஆனது.

ஷாலினி படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு ஏராளமான மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1979 ஆம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் அவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்த நிலையில் தான் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஒரு தலை ராகம் படத்தின் மூலம் பிரபலமான டி. ராஜேந்தர் ரயில் பயணங்களில் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தின் நாயகனாக ஸ்ரீநாத் நடித்தார். இந்த படத்தின் நாயகியாக ஜோதி நடித்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. பெரிய நடிகர்கள் இல்லாமலே இந்த படம் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள், காதலர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.

700 படங்களுக்கும் மேல் நடித்த வில்லன் நடிகர்.. 2 படத்தை தயாரித்து பெரும் நஷ்டம்.. எஸ்.வி ராமதாஸ் திரைப்பயணம்..!

இதனை அடுத்து தமிழில் அவர் சின்ன முள் பெரிய முள், கள் வடியும் பூக்கள், பூவிழி வாசலிலே போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு மலையாளத்தில் தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வந்ததால் அவர் மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் மலையாள படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ஹோட்டல் அறையில் தங்கி இருந்தார். அந்த அறையில் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் அவரது பெற்றோர் இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். ஆனால் கடைசி வரை அவரது மரணம் மர்மமாகவே இருந்தது. அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று கடைசி வரை தெரியாமல் இருந்தது.

தமிழில் நான்கு படங்கள் நடித்திருந்தாலும் ரயில் பயணங்களில் என்ற ஒரு படம் மட்டும் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அவர் அன்றைய காதலர்களின் ஹீரோ கல்லூரி பெண்களின் ஹீரோவாக இருந்தார். மேலும் அவர் தமிழில் இரண்டு சீரியல்களிலும் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாராணி.

ஸ்ரீநாத் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சாந்தி கிருஷ்ணாவுடன் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் குருவாயூர் கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1984 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்த நிலையில் 1995 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு சாந்தி கிருஷ்ணா 98 ஆம் ஆண்டு சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக சம்பளம்.. தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரி..!

நடிகை சாந்தி கிருஷ்ணா விஜய் மற்றும் சூர்யா நடித்த நேருக்கு நேர் திரைப்படத்தில் சூர்யாவின் அக்காவாகவும் ரகுவரன் மனைவியாகவும் நடித்திருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews