Connect with us

எதிர்பார்ப்பில் தமிழகம்… இன்று தாக்கலாகிறது முழு பட்ஜெட்!

Tamilnadu Secretarite

தமிழகம்

எதிர்பார்ப்பில் தமிழகம்… இன்று தாக்கலாகிறது முழு பட்ஜெட்!

எதிர்பார்ப்பில் தமிழகம்… இன்று தாக்கலாகிறது முழு பட்ஜெட்!

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு 2022 – 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட் என்பதால், பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக திமுக ஆட்சியில் தான் வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. திங்கட்கிழமை பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் எனவும், இந்த விவாதம் 3 நாட்கள் நடைபெறக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top