சையது முஷ்டாக் அலி கோப்பை: இந்த 2 பிளேயர்ஸ் வேற லெவல்! ஸ்டாலின் ட்விட்;

நேற்றையதினம் சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நமது தமிழ்நாடு அணியும்,கர்நாடகா அணியும் மோதின. முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்திருந்தது.

சையது முஷ்டாக் அலி

இதனால் 152 ரன்கள் எடுத்தால் இரண்டாவது முறை கோப்பை தமிழ்நாட்டிற்கு என்று பேட்டிங் செய்ய நம் தமிழக வீரர்கள் களம் இறங்கினர். அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் ஷாருக்கான் அடித்த சிக்ஸர் மூலம் இரண்டாவது முறையாக தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.

இதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி சையது முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறிப்பாக சாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட திறமையாளர்கள் சிறப்பான, ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வீரர்கள் எல்லோரும் மேலும் உயர் நிலை அடைய வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment