வெளியானது “ஸ்விக்கி” நிறுவனத்தின் உண்மை முகம் – ஊழியர்கள் பகீர் குற்றச்சாட்டு!

“SWIGGY நிறுவனம் எங்களை போலீசை வைத்து மிரட்டலாம் என்று நினைக்கிறார்கள் அதற்கு அரசு தான் பதில் சொல்ல வேண்டும்,முதல்வர் தான் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் மேலும் SWIGGY நிறுவனம் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் போன் செய்து மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்”.

“வேலை நிறுத்தம் ஒரு நாள் மட்டுமல்ல எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும் என்று தெரிவித்தார்…தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்”.

SWIGGY ஊழியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாபெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சரவணபவன் உணவகம் முன்பு SWIGGY ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து சட்ட உரிமை வழங்க வேண்டும் என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஊதிய முறையை பின்பற்ற வலியுறுத்தியும்,ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் மற்றும் ஒரு ஆர்டருக்கு மினிமம் 30 ரூபாய் வழங்க வேண்டுமென்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஸ்விக்கி நிறுவனம் போலீசை வைத்து ஊழியர்களை மிரட்டுவதாகவும் தற்பொழுது கூட பெரம்பூர் பெரம்பூர் பகுதியில் செல்வம் என்று வரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  மிரட்டுவதாக தகவல் வந்துள்ளதாகவும் தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.