சுவிகி நிறுவனத்தில் வாரந்தோறும் வழங்கப்படும் ஊக்கத் தொகையை நிறுத்திவிட்டு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சுகி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றக்கூடிய நபர்கள் இன்று காலை முதல் அதிகமானோர் தங்களது பாணியில் அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது..
இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய ஸ்விகி நிறுவனத்தில் மற்றோரு நிறுவனமான மண்டல அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஸ்விகி டெலிவிரி நபர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நேற்று முதல் 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் 14500 வரை கிடைக்கும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளின் படி, 16 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 16 மணி நேரம் பார்த்தால் கூட 12000 ஆயிரம் ரூபையை கூட பெற முடியாத நிலையில் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், சுவிகி நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்பால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.