News
45 நிமிடத்தில் டெலிவரி: பிளிப்கார்ட் அமேசானுக்கு சவால் விடுக்கும் ஸ்விக்கி
ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது தெரிந்ததே குறிப்பாக பிளிப்கார்ட் அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் வியாபாரத்தை செய்து வந்த நிலையில் தற்போது இதில் ஜியோ மார்ட்டும் இணைந்து கொண்டது\
ஜியோ மார்ட் டெலிவரி சார்ஜ் இல்லாமல் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது என்பதும் குறிப்பிட்ட தொகை கண்டிப்பாக பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிபந்தனைஇல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இருப்பினும் மிகவும் அமேசான் ஃப்ளிப்கார்ட் ஜியோ மார்ட் ஆகியவை ஒன்று அல்லது இரண்டு நாள் கழித்தே பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன
இந்த நிலையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி, ஆர்டர் செய்த 45 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யும் இன்ஸ்டாமார்ட் என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது
இதில் ஐஸ்கிரீம்கள் இறைச்சிகள் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்தால் 45 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் இரவு 12 மணிவரை இன்ஸ்டாமார்ட் சேவை இருக்கும் என்றும் இந்த நேரங்களில் ஆர்டர் செய்தால் 45 நிமிடங்களில் வீட்டிற்கு கொண்டு வந்து ஆர்டர் செய்த பொருட்களை கொடுத்து விடுவோம் என்றும் இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது.
