சுவாதி கொலை வழக்கு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகமே காரணம் எனக்கூறி 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுவாதி என்ற மென் பொறியாளர் கொலை செய்யப்பட்டார். இத்தகைய கொலையானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் அலட்சியமே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சுவாதியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் மக்களின் மரணத்திற்கு இழப்பீடுடாக ரூ.3 கோடி ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை அமர்வு ஆனது நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ரயில்வே நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும், சுவாதியின் கொலையானது திட்டமிட்ட பட்டதாக தெரிவித்தார். இதனால் சுவாதியின் கொலைக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரலாம் எனவும், இழப்பீடு கோரி வழக்கை தள்ளுபடி செய்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.