கைதான சாதுவை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேக்கு ஆதரவாக பேசியதாக சாது காளிச்சரண் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் டிசம்பரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த நிகழ்வில் சாமியார் பேசிய கோட்சே ஆதரவு பேச்சுக்கள் வைரல் ஆன நிலையில் அவரை சத்தீஸ்கர் காவல்துறை தேச விரோத பேச்சுக்களில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சாது காளிச்சரணை விடுவிக்க கோரி பஜ்ரங் தள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, காவல் துறையினர் முன்பாகவே ‘நாதுராம் கோட்சே ஜிந்தாபாத்’ என ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைக்கேட்டு இந்தூர் நகர காவல் துறையினர் அமைதியாக எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தில் சத்தீஸ்கரின் காங்கிரஸ் முதல்வர் பூபேந்தர் பகேலுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அனுமன் நல்ல புத்தியை வழங்க வேண்டும் எனவும் சத்தீஸ்கர் முதல்வருக்கு எதிராக கோஷமிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment