Entertainment
மீண்டும் உடல்நலக் குறைவில் உள்ள பொன்னம்பலம்: ரூபாய் 25 ஆயிரம் கொடுத்து உதவிய பாஜக பிரமுகர்

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அவருக்கு ரஜினி கமல் உள்பட பல்வேறு திரை உலகினர் உதவி செய்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் நிலையில் உள்ளார் என்றும் அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டிரஸ்ட் மூலமாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கியுள்ளார். அதேபோல் நல்ல மனம் படைத்தவர்கள் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் அனுப்பி உதவலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
எஸ்வி சேகரின் வேண்டுகோளை ஏற்று பல திரை உலகினர் பொன்னம்பலத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பொன்னம்பலம் விரைவில் பூரண நலம் பெற்று நலம் பெற வேண்டும் என்று திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
