2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுசுகி நிறுவனம் முதலீடு! டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து;

தற்போது நம் நாட்டில் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு முன் வந்து கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் மின்சார வாகனம் பேட்டரி தயாரிப்பில் சுசுகி நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 2026 ஆம் ஆண்டுக்குள் ரூபாய் 10 ஆயிரத்து 445 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் ஜப்பான் பிரதமர் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

குஜராத்தில் ரூபாய் 7300 கோடி முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று ஜப்பானிய சுசுகி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.

ரூபாய் 3100 கோடி முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்டம் உள்ளதாக சுசுகி மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் சுசுகி நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரூபாய் 1500 கோடி முதலீட்டில் ஆஸ்திரேலியா இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment