சுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி?!

86ae412fa9e62d34cd435e6c02c29789-2

நல்ல காளான், நச்சு காளான் என காளானில் இரண்டு வகை இருக்கின்றது. மற்ற எந்த காய்கறிகளிலும் கிடைக்காத உயிர்சத்தான வைட்டமின் டி இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க காளானை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாகும். புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் காளானுக்கு உண்டு. உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கின்றது. மாரடைப்பை தடுக்கின்றது. கருப்பை நோய்கள் சிலவற்றையும் காளான் குணப்படுத்தும். காளான் தாய்ப்பாலை வற்ற செய்யும். அதனால், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் காளான் சாப்பிடுவதை தவிர்க்கலாம்..

9a193029f30dc97d5e9f6f9552b8cb29

தேவையான பொருட்கள்
காளான்(மஷ்ரூம்) – 150 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 கப்
அரைக்க
வர மிளகாய் – 2
பட்டை – 2 1 ” துண்டு
கிராம்பு – 2
அனாசி பூ – 1
சோம்பு – 1 /2 தேக்கரண்டி
பூண்டு – 7 பல்
இஞ்சி – 4 துண்டு
தாளிக்க
பிரியாணி இலை – 2
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
புதினா – 10 இலைகள்
நெய் – 1 1 /2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி

8141f8bba1d533e67c29e64c0bbf9d3c-1

செய்முறை
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் இஞ்சி, பூண்டு தவிர மீதமுள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் வறுத்து, இஞ்சி, பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காளானை மஞ்சள்தூள் கலந்த தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை,புதினா ஆகியவற்றை முதலில் போடவும்.
பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு காளானை சேர்த்து வதக்கி, மூடி போட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.
காளானில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக வற்றி, காளான் சுருங்கும் வரை வேக விடவும்.
அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
காளான் முக்கால் பக்கம் வெந்த பின்னர், அரிசியை அதில் சேர்த்து, மசாலாவோடு சேருமாறு நன்கு கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் (2 கப் தண்ணீர்) ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி, குக்கர் மூடியை மூடி விடவும்.
ஒரு விசில் முடிந்து, இரண்டாவது விசில் வர இருக்கும்போது தீயை அணைத்து விடவும்.
குறிப்பு
காளான் பிரியாணிக்கு தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
மசாலா அரைத்து பொடி தயாரிக்க நேரமில்லாதவர்கள், கறி மசாலா மற்றும் மிளகாய்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.