
செய்திகள்
மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் செய்த கொடூர செயல்!!!- ராஜஸ்தானில் பரபரப்பு!!!
ராஜஸ்தானில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மன்ஸ்வாரா மாவட்டத்தில் தனது நண்பருடன் வெளியே சுற்றி அதை அறிந்த கணவர் ஆத்திரத்தில் தனது மனைவியை மரத்தில் கட்டி வைத்து சுமார் 7 மணி நேரம் அடித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியில் இருக்கும் காவல்துறையினர் கணவர் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 3 பேர் சிறுவர்கள் என கூறப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் வேறோரு இடத்திற்கு அப்பெண் ஆட்டோவில் சென்றதை பார்த்து கணவர் தவறாக புரிந்து கொண்டதாகவும் இதனால் கொடூரமாக தாக்கியதாக கூறியுள்ளார்.
राजस्थान के बाँसवाड़ा में एक महिला के साथ अत्याचार की पराकाष्ठा देखिए @priyankagandhi जी
यही है लड़की हूँ लड़ सकती हूँ ? pic.twitter.com/JnGA9Ynj6R
— Laxmikant bhardwaj (@lkantbhardwaj) July 30, 2022
