மனைவி நடத்தையில் சந்தேகம்; 8 வயது மகளை கொடூரமாக கொன்று; சடலத்தை வாளியில் மறைத்த தந்தை கைது!

மதுரையில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது எட்டு வயது மகளை கொன்று வாளியில் போட்டு வீட்டு பரணில் வைத்த தலைமறைவான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து – பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் எட்டு வயது சிறுமி தன்ஷிகாவின் கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்து அவரது மனைவி பிரியதர்ஷினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் படிக்க: https://tamilminutes.com/google-pixel-7-series-google-pixel-7-pixel-7-pro-price-and-specification/

தற்போது தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் நேற்று கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரியதர்ஷினியுடன் காளிமுத்துவிற்கு ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக, மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பரண் மீது வைத்த பின்னர் வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால் தற்கொலை செய்து கொள்ள பயமாக இருந்ததால் மதுரையில் சுற்றி திறிந்தாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து காளிமுத்துவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment