சினிமாவை மிஞ்சிய போலீஸ்! கொலையை தற்கொலை என்று மாற்றியதால் சஸ்பெண்ட்!!

காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறப்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் சினிமாவில் காட்டுவது போல கொடூரமாகத்தான் காவல்துறையினர் செயல்பட்டு கொண்டு வருகின்றனர்.

அவற்றுள் சினிமாவில் பெரும்பாலும் ஒரு கொலையை தற்கொலை போல் பாவித்து காட்டுவது வழக்கமாக இருக்கும். இந்த இந்த செயல் நிஜத்தில் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இதில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன்படி கொலையை தற்கொலை என மாற்றி வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு வத்திராயிருப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றியபோது கொலையை தற்கொலையாக மாற்றியுள்ளார் பாலாஜி. தற்போது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் குற்றத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

பாலாஜி 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முக்குளம் பகுதியில் காளிராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் காளி ராஜன் கொலை வழக்கில் குற்றவாளிகளுடன் சேர்ந்து தடயங்களை அழித்ததாக ஆய்வாளர் பாலாஜி மீது புகார் இருந்தது.

காளிராஜன் கொலை வழக்கை தற்கொலை என காவல் நிலைய கோப்புகளில் பதிவிட்டு வழக்கை முடித்துள்ளார் பாலாஜி. கொலை வழக்கை மறு ஆய்வு செய்தபோது குற்றவாளிகளுக்கு சாதமாக பாலாஜி செயல்பட்டது வெளியில் வந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment