Connect with us

சஸ்பெண்டான 12 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

News

சஸ்பெண்டான 12 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

a2a01edbbab218122016cb013ecb921b

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

தமிழகத்தை பொருத்தவரை இரண்டு காலியான இடங்களுக்கு இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடைபெறாது. ஆனால் அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சஸ்பெண்ட் ஆன 12 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

எம்எல்ஏக்கள் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 பாஜக எம்எல்ஏக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சபாநாயகரை அவதூறாக பேசியதாக 12 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top