
பொழுதுபோக்கு
விக்ரம் படத்தில் சூர்யாவின் முதல் லுக்!!..இணையத்தில் வைரலாகும் போஸ்டர்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
விக்ரம் படத்தின் இசைவெளியிட்டு விழா மற்றும் டிரைலர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது.கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது.மேலும் இந்த படத்தில் சுவாரஸ்யம் தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் சில தகவலை வெளியிட்டார்.
அஜித் நடித்த மாஸ் சீன்களை காப்பியடித்த பாலிவுட் படம்… யாரு அந்த ஹீரோ தெரியுமா?..
