ஒருவழியா சூர்யாவின் படம் திரைக்கு வரப்போகுது! இதனை உறுதி செய்த டீசர்!!
தமிழ் சினிமாவிலேயே நடிப்பின் நாயகன் என்ற பெயரை பெற்றுள்ளவர் நடிகர் சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் இவரின் உருவத் தோற்றத்தை வைத்து பலரும் கேலி செய்தனர். அதையெல்லாம் தகர்க்கும் வகையில் அவர் இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சூர்யா நடித்த படங்கள் அனைத்தும் இணையதளத்திலேயே வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர் சங்கம் சூர்யா மீது கடும் கோபத்தில் இருந்தது.
இவ்வாறுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது.
அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வினை, சத்யராஜ், சரண்யா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
