சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 24. இப்படத்தில் முன்னணி வேடங்களில் சூர்யா, நித்யா மேனன் , சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.முதல் முறையாக சூர்யா 3 வேடங்களில் நடித்து வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.
இரட்டைவேடங்களில் சூர்யா மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார் குறிப்பாக சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது,இந்த படத்தில் செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.
விக்ரம் குமாரின் விறுவிறுப்பான கதையில் ரகுமானின் இசையில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்தது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 24 திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 120 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது மேலும் இப்படம் வெளியாகி இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகி உள்ளதால் ரசிகர்கள் பலரும் இப்படம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
TNPSC தேர்வு எழுதுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – தமிழக அரசு!!
இந்த படம் 64 வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றது – சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு. 64 வது பிலிம்பேர் விருதுகளில் சூரியா விமர்சகர்களின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
இந்த படம் உலகளவில் 1,950-2,000 திரைகளில் வெளியிடப்பட்டது. யுனைடெட் ஸ்டேட்ஸில் திரை எண்ணிக்கை 267 ஆக இருந்தது, சிறப்பு பிரீமியர்கள் 5 மே 2016 அன்று நடைபெற்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் அவற்றுக்கிடையே 425 பிளஸ் திரைகளைப் பகிர்ந்து கொண்டன