Connect with us

‘சூரரை போற்று’ க்கு கிடைத்த அங்கீகாரம்: ஜப்பானில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார் சூர்யா !!

soorarai pottru cinemapettai 3

பொழுதுபோக்கு

‘சூரரை போற்று’ க்கு கிடைத்த அங்கீகாரம்: ஜப்பானில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார் சூர்யா !!

நடிகர் சூர்யா மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோருக்கு ஜப்பானில் சிறந்த கலைஞர்கள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானையும் தமிழ் சினிமாவையும் இணைக்கும் விதமாக ஒசாகா சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் என ‘சூரரை போற்று’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறந்த நடிகராக நடிகர் சூர்யா, சிறந்த இயக்குனர் சுதாகொங்கரா, சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விருதுகளை பெற்றனர்.

அதே போல கடந்த 2020 ஆண்டின் சிறந்த படமாக சூரரை போற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் விருதைப்பெற்றது. இதனை தொடர்ந்து சிறந்த கலை இயக்குனரா ஜாக்க விருதைப்பெற்றார்.

மேலும், சிறந்த நடிகையாக கா.பெ ரணசிங்கம் படத்திற்கு ஐஸ்வர்யா தேர்வுசெய்யப்பட்டு விருது பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top