’ஜெய்பீம்’ படத்தை திரையிட்டால்? சூர்யா விடுத்த எச்சரிக்கை!

’ஜெய்பீம்’ திரைப்படத்தை பொது இடங்களில் திரையிடக்கூடாது என்றும் மீறி திரையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சூர்யா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சூர்யா, ரஜிஷா விஜயன் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு நல்ல பாசிடிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை ஒரு சில ஹோட்டல்கள் மற்றும் பேருந்துகளில் கட்டணம் பெற்றுக்கொண்டு திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இதனை அடுத்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ’ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் பொது இடங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அது சட்ட விரோதம் என்றும் மீறி என்ற படத்தை திரையிடும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது ரசிகர்கள் இது போன்ற இடங்களில் படத்தை பார்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment