சூரிய வம்சம் படத்துல அடம்பிடிச்சு 3 முறை பாட்டு வச்ச விக்ரமன்.. சின்ராசு சூப்பர் ஹிட் ஆன வரலாறு

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் எத்தனைமுறை போட்டாலும் சலிக்காமல் இன்னமும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பர் என்றால் அது சூர்யவம்சம் திரைப்படமாகத்தான் இருக்க முடியும். தொலைக்காட்சிகளில் இந்தப் திரைப்படம் ஒளிபரப்பானால் இன்னமும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த பொழுது போக்குத் திரைப்படம். 1997-ல் வெளியான சூர்ய வம்சம் சரத்குமாருக்கு நாட்டாமை படத்திற்குப் பின் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

இயக்குநர் விக்ரமனின் அக்மார்க் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. சிம்பிளான கதையை சூப்பர் திரைக்கதையாலும், இசையாலும் படம் முழுக்க காதல், காமெடி, சண்டை, சென்டிமெண்ட் என அதகளப்படுத்தியிருப்பார் இயக்குநர் விக்ரமன். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு சக்கைப் போடு போட்டது. சோனி தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிப்பரப்பட்டு இந்திய அளவில் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற பெருமையை சூர்யவம்சம் திரைப்படம் பெற்றிருக்கிறது.

இந்தத் திரைப்படத்திற்கு இசை எஸ்.ஏ.ராஜ்குமார். 90-களின் இடைப்பட்ட காலகட்டங்களில் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் இதயத்தை வருடியது. இதில் சூர்ய வம்சம் படத்தின் பாடல்களும் கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடல். இந்தப் பாடலுக்கு முதலில் எஸ்.ஏ.ராஜ்குமார் டியூன் போட்டுக் கொடுத்த போது இயக்குநர் விக்ரமன் ஓகே சொன்னாராம். ஆனால் அதன்பின் உதவி இயக்குநர்களும், தயாரிப்பு தரப்பும் எதற்கு மூன்று முறை 1 முறை இருந்தால் போதும் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் இயக்குநர் விக்ரமன் கண்டிப்பாக 3 இடங்களில் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சைக்கிள் வாங்கவே கஷ்டபட்ட இயக்குநர்.. ஆடி காரில் மாப்பிள்ளையாகச் சென்று சாதித்த அசத்திய சம்பவம்

அரைகுறையாக ஒத்துக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் அதன் பின் படம் வந்த பின் இந்தப் பாடல் சூப்பர் டூப்பர்ஹிட் ஆனதும் தயாரிப்பாளர் விக்ரமனைப் பாராட்டியிருக்கிறார். இப்பாடலை இயற்றியவர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி ரவீந்தர். பாடலைப் பாடியவர்கள் ஹரிஹரன், சுஜாதா ஆகியோர் பாடியிருப்பர். ரோசாப் பூ பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர்ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் சின்ராசு கதாபாத்திரத்தை 2கே கிட்ஸ்களும் மீம்ஸ் வழியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...