
பொழுதுபோக்கு
சூர்யா சினிமாவில் அடியெடுத்து வைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்து ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சினிமா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் நடித்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் இப்படி நடித்துகொண்டிருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப படங்களை கொடுப்பதும் உண்டு. அந்த வகையில் அண்மை காலமாக சமூக நலன் உள்ள படங்களில் அதிகமாக ஆர்வம் கட்டி வருகிறார். அந்த வகையில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று,ஜெய்பீம்,எதற்கும் துணிந்தவன் படம் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது.
தற்போது அதைத் தொடர்ந்து இயக்குனர் பாலா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் இயக்குனர் வெற்றிமாறன்னுடன் கூட்டணி அமைத்து வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.சினிமாவை போலவே நிஜத்திலும் ஒரு தொண்டுநிறுவணம் ஒன்றையும் நடத்தி ஏழை எளியவர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
சினிமாவிலும் வாழ்க்கையிலும் , நிஜ வாழ்க்கையிலும் நேர்மையாக நடந்து வரும் சினிமா பிரபலங்களில் ஒருவர் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சூர்யா. அதில் அவர் கடன் பிரச்சினைகள் சினிமாவுக்கு வந்ததாக கூறினார்.
சந்திரமுகி 2 -வின் படத்தின் இசை அமைப்பாளர் யாருனு தெரியுமா?
