உச்சகட்ட பரபரப்பு…. பாஜகவிலிருந்து சூர்யா சிவா விலகல்!!

பாஜகவில் இருந்து திருச்சி சூரிய விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை தலைவராக இருப்பவர் திருச்சி சூர்யா. இவருக்கும் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் என்பவருக்கும் கடந்த சில நாட்களாக மோதல்கள் நிலவி வந்தது.

அதன் ஒரு பகுதியாக தொலைப்பேசி ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாஜக ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் விசாரணை நடத்தியது.

அப்போது திருச்சி சூரிய மீது குற்றம் நிறுபிக்கப்பட்ட நிலையில் 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார்.

அவர் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் எழுந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தற்போது பாஜகவில் இருந்து திருச்சி சூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.