பாஜக கூட்டங்களில் பங்கேற்க தடை- சூர்யா சிவாவுக்கு அதிரடி!!

இன்றைய தினத்தில் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் குறித்து ஓபிசி அணியின் பொது செயலாளர் சூர்யா அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இத்தகைய ஆடியோ அக்கட்சியின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பொது செயலாளர் சூர்யா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

டி20 கிரிக்கெட் தொடர்! இந்திய அணி அபார வெற்றி!!

இந்த சூழலில் ஆடியோ விவகாரம் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்கவேண்டும் என்று பாஜக துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம் தெரிவித்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஓபிசி அணியின் பொது செயலாளர் சூர்யா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.