Connect with us

விஜய்யை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளரை நாடும் சூர்யா! யாருப்பா அந்த தயாரிப்பாளர்?

suriyaa vijay

பொழுதுபோக்கு

விஜய்யை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளரை நாடும் சூர்யா! யாருப்பா அந்த தயாரிப்பாளர்?

சூரரைப் போற்று,ஜெய் பீம் ,எதற்கும் துணிந்தவன் வெற்றி படத்திற்கு பிறகு, இயக்குனர் பாலா உடன் கூட்டணியுள் இணைத்துள்ளார் சூர்யா. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இது ‘சூர்யாவின் 41’ வது திரைப்படமாகும்,இதில் இவர் இரு வேடங்களில் நடிக்க உள்ளாராம்,இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று முடிந்தது,அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவா வில் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.இப்படம் மீனவர்களின் வாழ்நாளில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது.

surya siva 1632046023 1636430143

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கூட வெளியானது.இந்த இரண்டு படங்களை தொடர்ந்து, சூர்யா சிறுத்தை, விஸ்வாசம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும், பாகுபலி ,கேஜிஎஃப் போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த படத்தில் தற்போழுது பல மாற்றங்கள் நடந்துள்ளது,முதலில் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த ஞானவேல் ராஜாவிடம் இருந்து படம் தயாரிப்பாளர் தில் ராஜுவிட்டான் மாறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதற்கு காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் சில நாட்களாகவே நடிகர் சூர்யாவிடம் இணைந்து படம் தயாரிக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

dil raju uf2crrfjdhbad

மேலும் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த ஞானவேல் ராஜாவும் படத்தை தொடங்காத காரணத்தினால் படம் கைமாறியதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்துக்கான இந்தி டப்பிங் ரைட்ஸ்,டிஜிட்டல் ஆகியவற்றை பெரியத்தொகைக்கு விற்றதாகவும்,படத்திற்காக அதிக பணம் செலவு செய்ததாகவும் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.

அதை தொடந்து நடிகர் சூர்யா தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் இந்த படத்திற்காக செலவு செய்த தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளாராம், அடுத்ததாக ஞானவேல் ராஜாவிடமும் அடுத்த படம் உங்களுக்கு நடிப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார் சூர்யா.

கலவரத்தில் முடிந்த செய்தியாளர்களின் சந்திப்பு – விக்னேஷ்க்கு தேவையா இதுலாம்?

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top