Connect with us

சூர்யாவா? கமல்லா? இதுல யார் விக்ரம்? நீங்களே கண்டுபிடிங்க..!!

vikram 1 2

பொழுதுபோக்கு

சூர்யாவா? கமல்லா? இதுல யார் விக்ரம்? நீங்களே கண்டுபிடிங்க..!!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டுள்ள திரைப்படமாக மாறியுள்ளது விக்ரம். தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் சரிவையே சந்தித்து வருகிறது.

அதோடு மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் வரத்து அதிகரித்துள்ளதால் தமிழ் சினிமா நாளுக்குநாள் பின்னடைவை சந்தித்து கொண்டு வருகிறது. இதனை விக்ரம் திரைப்படம் தான் முறியடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் மலையாள பிரபல நடிகர் பகத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் மக்கள் செல்வன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது, அதில் நடிகர் சூர்யாவும் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனால் நாளுக்கு நாள் விக்ரம் திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புக்களை கொடுத்துக் கொண்டு வருகிறது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் யார் விக்ரம் ஆக இருப்பார் என்று பலரும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயா டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் யார் விக்ரம் என்று கேள்வி எழுப்பி அதில் சூர்யா, கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் குழந்தையின் போட்டோவை வைத்து கேள்வி கேட்டுள்ளது.

who is the vikram

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top