Connect with us

ஓடிடி ரிலீஸால் சூர்யாவின் அடுத்த படத்திற்கு பிரச்சனை வருமா? பரபரப்பு தகவல்

Entertainment

ஓடிடி ரிலீஸால் சூர்யாவின் அடுத்த படத்திற்கு பிரச்சனை வருமா? பரபரப்பு தகவல்

4a9a0e2ccd39fdd3b3410b89246ab06a

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த முடிவுக்கு திரையுலகினர் பலர் ஆதரவு தந்தாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தாக்கம் சூர்யாவின் அடுத்த படத்தின் ரிலீஸின்போது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க இருப்பது மிகப் பெரிய நிறுவனங்கள் என்பதால் சூர்யா தப்பித்து விடுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இன்னொரு படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கின்றனர்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராடும் வலிமை எந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திரையரங்கு உரிமையாளர்களிடம் மிகவும் நெருக்கமான நட்பை கொண்டவர் தாணு என்பதால் அவருடைய படத்திற்கும் பிரச்சனை செய்ய மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது

எனவே சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top