
பொழுதுபோக்கு
ஜல்லிக்கட்டு மாடுபிடிக்க பயிற்சி எடுக்கும் சூர்யா…!!! வைரலாகும் லேட்டஸ் வீடியோ;;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் மாற்றான், உன்னை நினைத்தே, பிரண்ட்ஸ், சூரரை போற்று ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மொழியை தவிர பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசம் படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
தேசிய விருது வென்ற திரு @suriya_offl அவர்களின் பிறந்தநாள் அன்று, அவர் #வாடிவாசல் படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இன்று உங்களின் பார்வைக்கு @VetriMaaran @gvprakash @jacki_art @VelrajR #NotATeaserhttps://t.co/uEI8FQEYIc
— Kalaippuli S Thanu (@theVcreations) July 23, 2022
இன்றைய தினத்திl சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக குறிப்பாக அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மாஸ்காட்டி வருகிறது.
மேலும், 68-வது தேசிய விருது வழங்கு விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் மற்றும் சிறந்த பின்னணி இசை போன்ற 5 விருதுகளை அவர் நடித்த சூரரைப் போற்று படம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
