சூர்யா ஒன்னும் காயப்படுத்தும் தன்மை கொண்டவர் அல்ல; அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்!

நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாகி தற்போது வரை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார்.

jaibhim change

இதில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இந்த படமானது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜெய்பீம் படம் வெளியான பின்னர் தமிழகத்தில் அதிரடி உத்தரவுகளும் மாற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருகிறது.

ஆனால் வன்னிய சமூகத்தினரின் திரைப்படத்தினை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கூறியிருந்தார்.

அன்புமணி

அதற்கும் நடிகர் சூர்யா பதிலளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா அன்புமணிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நடிகர் சூர்யா யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவர் அல்ல என்று அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

வம்படியாக திணித்தோ, திரித்தோ ஜெய்பீம் படத்தில் எந்த ஒரு கருத்துருவாக்கம் செய்யவில்லை என்றும் பாரதிராஜா கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும் எங்களோடு பேசுங்கள் சரி என்றால், சரி செய்துகொள்ளும் நண்பர்கள் தான் நாங்கள் என்றும் இயக்குனர் பாரதிராஜா அன்புமணிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment