சூர்யாவின் ‘ஜெய்பீம்’ அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்!

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் வரவும் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே வெளியான ஜெய்பீம் படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘ஜெய்பீம்’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் போராடி வரும் காட்சிகளும் உள்ளன

மேலும் 50 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடையாள அட்டை கூட இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வாதிடும் காட்சிகளும் இந்த டிரைலரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment