சூர்யாவின் கட் அவுட் அகற்றம்

எண்பதுகளில் தமிழில் வெளியான பல படங்களுக்கு தென் மாவட்டத்தில் மிக பயங்கர கட் அவுட்களை வைத்து அசத்துவர். குறிப்பாக மதுரையில் எங்கு பார்த்தாலும் இவரது நடிகர்களின் கட் அவுட்தான் இருக்கும், காலப்போக்கில் ப்ளக்ஸ் போர்டுகள் வந்ததால் கட் அவுட்கள் பெரும்பாலும் வைக்கப்படாமல் இருந்தது.

3219155420bbf53d6601b0f359131817

இப்போது சில காலமாக மீண்டும் மிகப்பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் அஜீத் நடித்த விஸ்வாசம் படத்துக்கு ஆளுயர கட் அவுட்கள் வைத்து அசத்தப்பட்டது.

அதை முறியடிக்கும் விதத்தில் அதை விட மிக பெரிதாக சூர்யா ரசிகர்களால் திருத்தணி புறவழிச்சாலையில் 215 அடி அளவில் வைக்கப்பட்ட கட் அவுட்டால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். என் ஜி கே படத்துக்காக இந்த கட் அவுட் வைக்கப்பட்டது

முறைப்படி அனுமதி பெறவில்லை என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட் அவுட் அகற்றப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment