டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா – சிக்கா மதுரையில் கைது

டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி இவரும் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்பவரும் சேர்ந்து பல கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு வந்தனர்.

நீண்ட நாட்களாகவே இந்த பஞ்சாயத்துகள் நடக்கும் நிலையில் இவர்கள் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வந்து குழந்தைகளை பெண்களை பாதிப்பதாக பலமுறை புகார் எழுந்தது. அதனடிப்படையில் கமிஷனர் ஆபிசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்தனர் ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளில் திட்டிக்கொண்டனர்.

இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் சுற்றி வந்ததால்   இந்த நிலையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீஸார் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment