பிரபல நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.
மேலும் நேற்று சூர்யாவின் பிறந்த நாளை அடுத்து அவர் நடித்து வரும் 39வது படத்தின் டைட்டில் ’ஜெய்பீம்’ என்றும் 40வது படத்தின் டைட்டிலில் ’எதற்கும் துணிந்தவன்’ என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படங்களின் டைட்டில் போஸ்டர்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் மத்தியில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அப்போது சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா கேக் வெட்டியதும் படக் குழுவில் இருந்த இயக்குனர் பாண்டிராஜ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினர் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.